
அன்பு நண்பரே
திருநங்கைகள் இந்த சமூகத்தில் மிகவும் கடைநிலையில் வாழ்பவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? சமூகத்தில் பெரும்பாலானவர்களால் இழித்தும், பழித்தும், கிண்டல் கேலி செய்யப்பட்டும், தாக்கப்பட்டும், வெறுத்துஒதுக்கப்படும் வாழும் திருநங்கைகளில் வெகு சிலர் மட்டுமே கல்வியறிவு பெற்று நல்லநிலையில் உள்ளனர். பெரும்பாலானோர் பிச்சையெடுத்தும் பாலியல் தொழில் செய்துமே வாழ்ந்துவருகின்றனர்.
சகோதரி தொண்டு நிறுவனம் அரசிடமிருந்தோ அல்லது எந்த நிதியுதவி செய்யும் நிறுவனங்களிடமிருந்தோ எத்தகைய உதவியும் பெற்றதில்லை.எங்களுக்கான ஒரு சரியான அலுவலகம்கூட இல்லை. எனினும் திருநங்கைகளுக்கான சகோதரியின் தொண்டினை இப்பக்கங்களில் காணுங்கள்
பேரன்புடன்,
கல்கி
புன்னகை’ – கல்கியின் குறும்படம்
‘கல்கி வழங்கும் ‘புன்னகை’
என்ன செய்தோம்?
ஏப்ரல் 09
சென்னை மெரினா கடற்கரையில் ‘சகோதரி’யின் தெரு நாடக நிகழ்வு
ஜூன் 09
பாலியல் சிறுபான்மையினரின் பேரணியான ‘சென்னை வானவில் உலா’வில் சகோதரி முன்னிலை
ஜூலை 09
திருநங்கை சேவகிகளின் தமிழக, கேரள மண்டலக்கூட்டம்
ஆகஸ்ட் 09
பாலியல் சிறுபான்மையினரின் வாழ்வும், பிரச்னைகளும் பற்றி பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுடன் ஒரு சிறப்பு விவாதக்கூட்டம்

திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த
சகோதரி அணியின் கேரள பயணம்

திருநங்கைகளுக்கான உலகின் முதல் திருமண வலைத்தளம் தொடக்கம்

செப்டம்பர் 09

திருநங்கைகளின் பொருளாதார நிலை வளம்பெற சுயதொழில் பயிற்சி
அக்டோபர் 09

சகோதரி மற்றும் MSSW கல்லூரி மாணவர்கள் நடத்திய மருத்துவ முகாம்
நவம்பர் 09

குழந்தைகள் தினம் மற்றும் உலக அன்பு தினத்தன்று ஏழைக்குழந்தைகளுக்கு பொம்மைகள் மற்றும் பரிசுப்பொருட்கள்