Marriage

Kalki's articles in Tamil

Contact Information

திருநங்கை.நெட் - தமிழ்நாடடில் வாழும் திருநங்கை கல்கியால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

Kalki Subramaniam, Transgender rights actvist and actor

Thirunangai.net is a matrimonial project for transsexual people initiated by Kalki Subramaniam, a  successful transsexual woman from India.

 


English Page

Thirunangai.netThirunangai.net

திருநங்கையர் திருமண வலைத்தளம்

Thirunangai.net

திருநங்கை சுயம்வரம்

தனக்கே தனக்காக ஒரு கணவன், குழந்தைகள், குடும்பம் என்ற கனவுகளும், ஆசைகளும் குடும்ப உறவுகளின் மீதான மதிப்பும் திருநங்கைகளுக்கு உண்டு. அவைகள் அத்தனையும் நிராகரிக்கப்பட்டு வெறும் பாலியல் தொழிலாளிகளாக, பிச்சைக்காரர்களாக மட்டுமே வாழ்கிற அவலத்திற்கு இச்சமூகத்தில் திருநங்கைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருநங்கைகளை பாலியல் விருப்பத்திற்காக மட்டுமே பயன்படுத்தி சுரண்டிக்கொண்டிருக்கும் இச்சமூகத்தில் திருநங்கைகளை மனைவியாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை பகிர தைரியமாக முன்வரும் புரட்சிகரமான ஆண்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய ஆண்களை தேடி அவர்களை அழைத்து அவர்களுக்கு ஏற்ற திருநங்கை துணைவியை தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிதான் 'திருநங்கை சுயம்வரம்'.

Kalki Subramaniam and Vivin in the film Narthaki
கல்கி மற்றும் விவின் ‍‍ நர்த்தகி திரைப்படத்தில் ஒரு காதல் காட்சி

இந்த நிகழ்ச்சியில் மணப்பெண்களாக கலந்துகொள்ளவிரும்பும் திருநங்கைகள் கல்கியை aurokalki@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவேண்டும். திருநங்கை சுயம்வரத்தில் கலந்துகொண்டு திருநங்கைகளை திருமணம் செய்துகொள்ள‌விரும்பும் ஆண்கள் reachsahodari@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. இது முற்றிலும் திருநங்கைகளின் சமூக அங்கீகரிப்புக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.

இந்த நிகழ்வில் பார்வையாளர்களாக கலந்துகொள்ள சமூக ஆர்வலர்கள், சேவை மனப்பன்மையுடையோர், மாணவர்கள் மற்றும் சமூக மாற்றம், சமூகப்புரட்சியில் நம்பிக்கைகொண்ட துடிப்புமிக்க அனைவரையும் அழைக்கிறோம்.

விரைவில் முகூர்த்ததினம் அன்று சென்னையில் இந்த நிகழ்வு நடைபெறும். நிகழ்ச்சி நடைபெறும் இடம் செப்டம்பர் முதல்வாரம் இந்த இணையதளத்திலும், ஊடகங்கள் மூலமாகவும் அறிவிக்கப்படும்.

இந்த நிகழ்வுக்கு எங்களுடன் கைகோர்க்க சமூக அக்கறைகொண்ட தன்னார்வத்தொண்டர்களை வரவேற்கிறோம்.

சமூக அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும், சமூக அக்கறை கொண்ட மாணவர் குழுக்களையும், மக்கள் குழுக்களையும் இந்நிகழ்வில் இணைத்துக்கோடு செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தொடர்புக்கு: reachsahodari@gmail.com

 

 
Copyright: Sahodari Foundation 2012