|
உதவுங்கள் திருநங்கை.காம் இணையதளம் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் திருநங்கைகளுக்கு ஒரு வாழ்க்கைத்துணை ஏற்படுத்தித்தரும் ஒரு புரட்சித்திட்டமாகும். திருநங்கைகளின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவை செய்துவரும் சகோதரி அமைப்பின் ஒரு லட்சிய திட்டமே இது. சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாக திருநங்கைகள் வாழ, திருநங்கைகளை திருமணம் செய்துகொள்ள ஆண்கள் முன்வரவேண்டும். இத்தகைய திருமணங்கள் நிச்சயம் அன்பின் அடிப்படையிலும், ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ்தலிலுமே வெற்றி பெறும். சகோதரி அமைப்பின் இத்திட்டத்திற்கு உதவுங்கள். உங்கள் நன்கொடைகள் திருநங்கைகளின் சமூகப்பணிகளுக்கு மேலும் மேலும் வலுசேர்த்து நல்மாற்றங்கள் அமைய வழிவகுக்கும். இத்திருமணத்திட்டத்திற்கு மட்டுமின்றி சகோதரியின் ‘பட்டாம்பூச்சிகள்’ திட்டத்திற்கும் உங்கள் உதவி தேவை. வறுமையால் வாடும் திருநங்கைகளை பிச்சை எடுத்தல் மற்றும் பாலியல் தொழில் செய்தல் ஆகியவற்றிலிருந்து மீட்டு அவர்களின் பொருளாதார நிலை உயர ‘பட்டாம்பூச்சிகள்’ சுயதொழில் திட்டம் உதவும். அதற்கு உங்கள் உதவி தேவை. இன்றே எங்களுக்கு எழுதுங்கள். எங்கள் மின்னஞ்சல் முகவரி: reachsahodari@gmail.com. உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். முதல் பக்கம் |