அயல்நாட்டில் திருநங்கையர் ஓவியம்! -இந்து தமிழ் கட்டுரை
தி தமிழ் இந்து பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் ரவிக்குமார் கட்டுரை Published : 22 Oct 2018 11:58 IST
சமூகச் செயற்பாட்டாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர் எனப் பல திறமைகளைக் கொண்ட திருநங்கை கல்கி சுப்ரமணியத்தின் அறிந்திராத இன்னொரு முகம், ஓவியர்.
பள்ளிப் பருவத்தில் பாலின மாறுபாட்டின் காரணமாகத் தன்னைக் கேலியும் கிண்டலும் செய்தவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கல்கி நாடிய இடம் காடு. “வானுயர்ந்த மரங்கள், பறவைகளின் ஓசை, மூங்கில்களின் உரசல், காய்ந்த இலைச் சருகுகளின் ஓசை போன்றவையெல்லாம் நான் கவிதை எழுத காரணிகளாகின. கூடவே, மனத் திரையில் பதிந்தவை ஓவியங்களாவும் மாறின” என்கிறார் கல்கி.
வெளிநாட்டில் ஓவியக் கண்காட்சி
கியூபிஸம், ஸ்பான்டேனியஸ், ரியலிஸம் போன்ற பாணிகளில் இவர் வரைந்த ஓவியங்களை அமெரிக்கா, கனடா
Read More...