Announcing India’s first RYLA (Rotary Youth leadership Awards) for TransYouth
சகோதரி அறக்கட்டளை மற்றும் கோவை டெக்ஸ்சிட்டி இணைந்து இளம் திருநர்களுக்கான இரண்டுநாள் பயிற்சிப்பட்டறை நிகழ்வை ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கோவை டெக்ஸ்சிட்டி வளாகத்தில் நடத்துகிறது. 30 வயதுக்குட்பட்ட திருநங்கைகள், திருநம்பிகள், இடைலிங்காயினர், மாற்றுப்பாலினர் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த இரண்டு நாள் நிகழ்வில் கீழ்கண்ட பயிற்சிகள் முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகின்றன.
- தலைமைத்துவ பயிற்சி
- தகவல் தொடர்பு பயிற்சி
- சுய முன்னேற்றப்பயிற்சி
- உளவியல் ஆலோசனைகள்
- உத்வேக மனிதர்களின் உரைகள்
- உளவியல் ஓவிய பயிற்சி
- விளையாட்டுக்கள்
- சிறந்த மனிதர்கள் குறித்த சிறு ஆவணப்படங்கள் திரையிடல்
பயிற்சிக்கு கட்டணம் ஏதும் இல்லை. பயிற்சிக்காலத்தில் தங்கும் செலவு, உணவு ஆகியன சகோதரி அறக்கட்டளையே ஏற்றுக்கொள்ளும். உங்கள் பயணச்செலவும் வழங்கப்படும். இரண்டுநாள் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரண்டு நாள் பயிற்சி முடிவில் சான்றிதழும் வழங்கப்படும். இந்த நிகழ்வு இளம் தலைவர்களை உருவாக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைய உங்கள் பெயர், பிறந்த தேதி, பணிசெய்யும் இடம் (பணிசெய்வோர் மட்டும்), படிக்கும் கல்வி நிறுவனம் (பயில்வோர் மட்டும் ) சகோதரி அறக்கட்டளை ஈமெயில் முகவரிக்கு ( reachsahodari@gmail.com)விருப்பம் தெரிவிக்கவும். இந்த நிகழ்வில் பங்கேற்க கல்வித்தகுதி ஏதுமில்லை. 30 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்கவேண்டும்.
மேலும் தகவல்களுக்கு: சகோதரி அறக்கட்டளை +91 7639741916